ஜார்க்கண்ட்: காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

ஜார்க்கண்ட் யானை தாக்குதல்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்தில் காட்டு யானை ஒன்றின் தாக்குதலில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கார்வா மாவட்டத்தைச் சேர்ந்த சத்ரு கிராமத்தில் தாகர் மஞ்சிகி என்ற 65 வயது மூதாட்டி வசித்து வந்தார். இவர் நேற்று இரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, வனப்பகுதியை ஒட்டிய அவரது வீட்டிற்குள் காட்டு யானை ஒன்று நுழைந்தது.

குடிசை வீட்டில் அவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், யானை வீட்டின் சுவர்களை இடிக்க முயன்றது. இந்த இரைச்சலால் விழித்துக்கொண்ட தாகர் மஞ்சிகி, பயத்தினால் வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது வாசலில் காத்திருந்த காட்டு யானை அவரைத் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து மூதாட்டியின் உடலை மீட்டனர். பின்னர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#crimeNews #wildlife #jharkhand #elephant #ஜார்க்கண்ட் #யானை #elephant #jharkhandElephant #elephantAttack #ranchiNews

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *