இயக்குநராக எனது 30 கால கனவு நனவாகியுள்ளது: மகுடம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஷால்

இயக்குநராக எனது 30 கால கனவு நனவாகியுள்ளது: மகுடம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஷால்

நடிகர் மற்றும் தயாரிப்பாளராகத் திரையுலகில் முன்னணி நிலையில் இருக்கும் விஷால், தற்போது இயக்குநராகத் தனது முதல் படத்தைத் தொடங்கியுள்ளார். அவர் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘நச்சிந்தி மச்சானே’ வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இ நிகழ்வில் கலந்துகொண்ட விஷால், இயக்குநராகத் தனது பயணத்தைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

30 ஆண்டு காலக் கனவு

மேடையில் பேசிய விஷால், தான் இதுவரை நடிகராகவும், தயாரிப்பாளராகவும், சிறப்பு விருந்தினராகவும் பலமுறை மேடை ஏறியிருந்தாலும், இயக்குநராகத் தோன்றுவது முதல்முறை என்று குறிப்பிட்டார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக நாகார்ஜூனா நடிப்பில் ராம் கோபால் வர்மா இயக்கிய ‘சிவா’ திரைப்படத்தைப் பார்த்தபோது, தனக்கு இயக்குநராக வேண்டும் என்ற ஆசை உருவானதாகவும், இன்று அந்தத் திட்டம் நனவாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

திரைக்குப் பின்னால் இயக்கிய அனுபவங்கள்

தனது இயக்குநரகப் பயணத்தைப் பற்றி பகிர்ந்த அவர், சில திரைப்படங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய அனுபவங்கள் தனக்கு இருப்பதாகக் கூறினார். இருப்பினும், ‘மகுடம்’ திரைப்படமே தனது முதல் அதிகாரப்பூர்வ அறிமுகப்படம் என்றும், முதல் பட இயக்குநராக ஒவ்வொரு நுணுக்கத்தையும் கவனமாக கையாண்டு வருவதாகவும் கூறினார்.

ஆர்.பி. சௌத்ரியின் பங்களிப்பு

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி குறித்துப் பேசிய விஷால், அவர் இதுவரை 44 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் என்றும், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 45வது அறிமுக இயக்குநராகத் தன்னை இணைத்துக் கொண்டது இறைவனின் திட்டம் என்று தெரிவித்தார். மேலும், ஆர்.பி. சௌத்ரி வழங்கிய பொறுப்பைச் சரியாக நிறைவேற்றத் திட்டமிட்டு உழைத்ததாகவும், இந்தப் படத்தின் இயக்குநராக அவர் நுழைந்த விதம் ஒரு விசித்திரமான சூழல் என்று விளக்கினார்.

முதலில் இந்தப் படத்தை விஷால் இயக்குவதாகத் திட்டமிடப்படவில்லை. ஆனால், சில சூழல்கள் காரணமாக அவர் இயக்குநராகப் பொறுப்பேற்றார். மற்றொரு இயக்குநர் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாத நிலையில், அடிப்படை கதையை எடுத்துக்கொண்டு புதிய வடிவத்தில் இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்தார். அதே நேரத்தில், கதையின் உரிமையாளருக்குரிய அங்கீகாரமும் ஊதியமும் வழங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

தன்னம்பிக்கையும் அச்சமும்

பல ஆண்டுகள் திரையுலகில் இருந்தும், சில படங்களை இயக்கியும் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கவில்லை என்று கூறிய விஷால், இயக்குநராகத் தொடங்கும் போது ஒருவித அச்சம் இருப்பதை வெளிப்படுத்தினார். தனது இரண்டாவது படம் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று காத்திருக்காமல், முதல் படமே ஒரு சிறந்த படைப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத் தினசரி வேலைகளில் மெருகேற்றல்களைச் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.

ஜூலை மாதம் வெளியாகத் திட்டமிட்டுள்ள ‘மகுடம்’ படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

#vishal #magudam #superGoodFilms #tamilCinema #actorVishal #விஷால் #ஆர்.பி.செளத்ரி #rBChoudary #superGoodFilms #மகுடம்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *