விஸ்வநாத் & சன்ஸ்: சூர்யா பாடிய புதிய பாடல் வெளியீடு

விஸ்வநாத் & சன்ஸ்

நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படமாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படத்தின் இசைப் பணிகளை ஜி வி பிரகாஷ் கவனித்து வருகிறார். ஏற்கனவே வெளியான ‘பட்டாம்பூச்சி’ பாடல் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் அடுத்த பாடலைப் பற்றிய தகவல்களை இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் பகிர்ந்துள்ளார்.

சூர்யாவின் குரலில் புதிய பாடல்

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு துள்ளல் இசையுடைய பாடலை நடிகர் சூர்யாவே பாடியுள்ளார் என்பதை ஜி வி பிரகாஷ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். கென் கருணாஸ் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

சினிமா பயணத்தில் சூர்யா இதுவரை சில பாடல்களைப் பாடியுள்ளார். ‘அஞ்சான்’ திரைப்படத்தில் ‘ஏக் தோ தீன்’, ‘பார்ட்டி’ படத்தில் ‘சாரே’, ‘சூரரைப்போற்று’ படத்தில் ‘பருந்தாகுது’ மற்றும் ‘ரெட்ரோ’ படத்தில் ‘லவ் டீடாக்ஸ்’ ஆகிய பாடல்களைப் பாடிய அவர், இந்தப் படத்தில் பாடியிருப்பது ஐந்தாவது பாடயமாகும்.

வெளியீட்டுத் தேதி மாற்றம்

‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள இயக்குனர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் இந்தப் படம் உருவாவதால், இதன் கதைக்களம் குறித்து ஆர்வமாக உள்ளது சினிமா வட்டாரங்கள். முதலில் ஜூலை மாதம் வெளியாவதாகத் திட்டமிட்டிருந்த இந்தப் படம், தற்போது தேதி மாற்றப்பட்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையிடத் தயாராக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

#suriya #vishwanathAndSons #gvPrakash #venkyAtluri #tamilCinema #actorSuriya #vishwanath&Sons #விஸ்வநாத் & சன்ஸ் #நடிகர் சூர்யா

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *