கன்னியாகுமரியில் குடும்பப் பிரச்சனையால் மீனவர் தற்கொலை

மீனவர் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் குடும்பத் தகராறால் மன உளைச்சலுக்கு ஆளான மீனவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மண்டைக்காடு அருகே உள்ள புதூர் சி.ஆர்.எஸ். நகரைச் சேர்ந்தவர் சகாய எல்டின் (40). இவர் நீண்டகாலமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி அனுஜா (36), உள்ளூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த மாதம் இந்தத் தம்பதியினரிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் விளைவாக, அனுஜா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றதால் கடந்த சில நாட்களாக சகாய எல்டின் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று தனது வீட்டில் இருந்த மின்விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக சகாய எல்டின் வீட்டிலிருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவைத் தட்டினர். கதவு திறக்காத நிலையில், ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இந்தத் தகவல் அவரது மனைவி அனுஜாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அனுஜா, மண்டைக்காடு காவல்துறையில் இது குறித்துப் புகார் அளித்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டனர்.

மீட்கப்பட்ட உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து வழக்கை விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

#crimeNews #kanyakumari #localNews #tamilNadu #கன்னியாகுமரி #தற்கொலை #kanniyakumari

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *