தமிழக வெற்ற கழகத்தில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இணைவு

தமிழக வெற்ற கழகம்

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கட்சியில் இணைவு நிகழ்ச்சியில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய அரசியல் ஆளுமைகள் கட்சியில் இணைந்தனர்.

கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்ற கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, விஜய் இரண்டாவது முறையாகக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.

முக்கியத் தலைவர்களின் இணைவு

இந்த நிகழ்வில் திமுகவின் முக்கிய முகமாகத் திகழும் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் மற்றும் நடிகர் ரவி மரியா ஆகியோரும் தமிழக வெற்ற கழகத்தில் இணைந்தனர்.

முன்னாள் பிரதிநிதிகளின் வருகை

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான கீதா மணிவண்ணன் (கிருஷ்ணபுரம்), மணிவண்ணன் (கரூர்), வி.பி. கலைராஜன் (திமுக), நிலக்கோட்டை அன்பழகன், பாண்டியம்மாள் (உசிலம்பட்டி), கன்டோன்மெண்ட் சண்முகம் (ஆலந்தூர்), ஜெயசீலன் (கூடலூர்) உள்ளிட்டோர் கட்சியில் இணைந்தனர். அத்துடன் அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளர் சின்னசாமி, பிரபாகரன், பார்த்திபன் மற்றும் பையூர் சந்தானம் ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து கட்சியில் இணைந்து கொண்டனர்.

புதிதாகக் கட்சியில் இணைந்தவர்களுக்கு என்னவிதமான பொறுப்புகளையும், பதவிகளையும் வழங்குவது குறித்து கட்சியின் உயர் மட்டத்தில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

#tvk #vijay #dmk #aiadmk #tamilNaduPolitics #திமுக #திமுக எம்பி ஜெகத்ரட்சகன் #தவெக #தவெக கட்சி #dmkMpJagathrakshakan

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *