நடிகர் பாவா லட்சுமணனுக்கு அமைச்சர் ராஜ்மோகன் உதவி: சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கும் வசதி

பாவா லட்சுமணன்

திரையுலகில் நகைச்சுவை நடிகராகப் புகழ்பெற்ற பாவா லட்சுமணன், தற்போது கடுமையான உடல்நலக் குறைவாலும் பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டுள்ளார். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நோயின் தாக்கம் காரணமாக காலில் இருந்த விரல்களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தங்குவதற்கு இடமில்லாமல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலக வாசலில் அவர் தங்கியிருந்த செய்தி சமூக வலைதளங்கள் மற்றும் திரையுலகத் தரப்பினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இச்சூழ்நிலையில், மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ் மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர் லெஜெண்ட் சரவணன் மூலமாக அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவியைப் பெற்றுக்கொடுத்தனர். மேலும், பல திரை நட்சத்திரங்களும் அவரது மருத்துவச் செலவுகளுக்காக நிதி வழங்கினர்.

அமைச்சர் ராஜ்மோகனின் உடனடி நடவடிக்கை

நடிகர் பாவா லட்சுமணனின் இக்கட்டான நிலையை அறிந்து கொண்ட அமைச்சர் ராஜ்மோகன், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சாலையோர அலுவலக வாசலில் அவர் தங்கியிருப்பதை உணர்ந்த அமைச்சர், உடனடியாகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்குத் தங்குமிடம் ஏற்பாடு செய்தார்.

தன்னக்கு ஒதுக்கப்பட்டிருந்த சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறையில் தற்காலிகமாகத் தங்குமாறு அமைச்சர் அவரிடம் கேட்டுக்கொண்டார். “அடுத்த ஆறு மாதங்களுக்கு இங்கே தங்குங்கள்; அதன் பிறகு நீங்கள் நிரந்தரமாகத் தங்குவதற்குத் தேவையான இடத்தினை நான் ஏற்பாடு செய்து தருகிறேன்” என்று உறுதியளித்தார்.

அமைச்சரின் இந்த மனிதாபிமான நடவடிக்கையால் நெகிழ்ச்சியடைந்த நடிகர் பாவா லட்சுமணன், அவருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். திரையில் பலரை சிரிக்க வைத்த ஒரு கலைஞன், நிஜ வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டத்திற்கு இந்த உதவி ஒரு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

#bavaLakshmanan #ministerRajmohan #tamilCinema #humanity #பாவா லட்சுமணன் #அமைச்சர் ராஜ்மோகன்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *