திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவு

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

புனித பீட்டர் பால் என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில், கடந்த 21-ஆம் தேதி திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தின் போது அங்கு பணியாற்றி வந்த வடமாநில பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 74 பேர் கடுமையான பாதிப்புகளால் மயக்கமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக இரண்டு அரசு மருத்துவமனைகளிலும், இரண்டு தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தொழிலாளர்கள்

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளர்களில் 16 பேர் சிகிச்சை பலனின்றி ஏற்கனவே உயிரிழந்தனர். இந்நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவைச் சேர்ந்த அஞ்சனா ஜூவாங்கா (25) என்பவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் இந்த கொடூர விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலை

பாதிப்படைந்த மற்ற தொழிலாளர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

#திருவள்ளூர் #விபத்து #தொழிலாளர் நலன் #அமோனியா #அமோனியா வாயு கசிவு #அமோனியா வாயு #tiruvallur #ammoniaGas #ammoniaGasLeak

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *