தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகிறார் நடிகை சமந்தா: மகப்பேறு விடுப்பு அறிவிப்பு

நடிகை சமந்தா

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தனது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தை எதிர்நோக்கியுள்ளதையடுத்து, தற்காலிகமாக திரைப்படங்களில் இருந்து விலகி மகப்பேறு விடுப்பு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

தாய்மை என்பது தனது வாழ்வில் ஒரு சிறப்பான அத்தியாயம் என்றும், இந்த அனுபவத்தை முழுமையாக ரசித்து மகிழ விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் திரும்புவதற்கு முன்பாக, இந்த காலக்கட்டத்தை குடும்பத்துடன் கழிக்க விரும்பும் சமந்தாவின் அறிவிப்பு, அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்காலிக ஓய்வு மற்றும் திரும்புதல்

இந்த ஓய்வு நிரந்தமானது அல்ல என்றும், தற்காலிகமானது மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தனது உடல்நிலை மற்றும் குடும்ப நலனில் கவனம் செலுத்திய பிறகு, விரைவில் புதிய திட்டங்களுடன் மீண்டும் திரும்புவேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சமந்தா தாய்மையை அடைய உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

‘எங்கள் தங்கம்’ படத்தின் வெற்றி

சமந்தா தற்போது நடித்துள்ள ‘எங்கள் தங்கம்’ (தெலுங்குப் பதிப்பு: மா இன்ட்டி பங்காரம்) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. பிவி நந்தினி ரெட்டி இயக்கத்தில் வெளியான இந்தப் படம், கடந்த 19ஆம் தேதி ரிலீஸான நிலையில், முதல் நான்கு நாட்களில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இத்திரைப்படத்தை சமந்தாவின் கணவர் ராஜ் நிடிமோரு தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், சமந்தா முதன்முறையாக அதிரடி நாயகியாக நடித்திருப்பது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு குறித்த காணொளி (Making Video) தற்போது வெளியாகியுள்ளது. அதில், சண்டைக் காட்சிகளுக்காக சமந்தா மேற்கொண்ட கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் வெளிப்பட்டுள்ளது, இதனை சினிமா ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமாகி, நான் ஈ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தைப் பிடித்த சமந்தா, பாலிவுட்டிலும் தனது முத்திரையைப் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#samantha #cinemaNews #celebrityUpdates #kollywood #tollywood #சமந்தா #சமந்தா சினிமா #சமந்தா திரைப்படம் #சமந்தா கர்ப்பம் #சமந்தா திருமணம்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *