பாலன் திரைப்படத்தைப் பாராட்டிய சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர்

பாலன் திரைப்படம்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘பாலன்’ திரைப்படம், அதன் தனித்துவமான கதையாலும் நேர்த்தியான இயக்கத்தாலும் கவனம் பெற்று வருகிறது. இப்படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர், சமூக வலைதளங்களில் அந்தப் படத்தின் சிறப்பம்சங்களைப் பகிர்ந்துள்ளனர்.

திரைப்படத்தின் தாக்கத்தைப் பகிர்ந்த சூர்யா

பாலன் திரைப்படம் குறித்த தனது பதிவில் சூர்யா, படத்தின் உணர்ச்சிகரமான பயணத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். “பாலன் திரைப்படத்தைப் பார்த்தேன்; அதன் தாக்கத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு, இத்தகைய ஒரு கதையைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இயக்குநர் சிதம்பரம் மற்றும் அவரது குழுவினர் எதை வழங்க விரும்பினார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று அவர் பாராட்டியுள்ளார்.

மலையாளத் திரையுலகிலிருந்து வெளிவந்துள்ள மற்றொரு மிகச்சிறந்த படைப்பு இது என்றும், ஜித்து மாதவனின் தனித்துவமான கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு தனது மரியாதையைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அறிமுக நடிகர்களைக் கொண்டு கணிக்க முடியாத ஒரு கதையம்சம் கொண்ட படத்தை உருவாக்கியது பாராட்டுக்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பு எனப் படத்தின் அனைத்துத் தொழில்நுட்பக் கூறுகளும் மிகச் சிறப்பாக அமைந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர்களின் நடிப்பைப் பாராட்டிய ஜோதிகா

நடிகை ஜோதிகா தனது பதிவில், “பாலன் தி பாய்” திரைப்படம் சிதம்பரம் மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ள ஒரு படைப்பு என்று குறிப்பிட்டுள்ளார். ஜித்து மாதவனின் திரைக்கதையில் மர்மம், பரிவு, அப்பாவித்தனம் மற்றும் குற்ற உணர்வு ஆகியவை நேர்த்தியாக இணைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

படத்தில் பெண்களின் வலிமையை வெளிப்படுத்திய ஃபர்சானாவின் நடிப்பும், சிறுவர்கள் ஆதிசேஷன் மற்றும் சினன் ஆகியோரின் அப்பாவித்தனமான நடிப்பும் பார்வையாளர்களின் இதயத்தைத் தொடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், டாலி ஜூன் நடித்த முதிய பெண்ணின் கதாபாத்திரம் மிகவும் புதுமையானது என்று அவர் பாராட்டியுள்ளார்.

முன்னணி நடிகரான டொவினோ தாமஸ், தனது நட்சத்திர அந்தஸ்தை விடுத்து முழுமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்றும், சுஷின் ஷியாமின் இசை படத்தின் விறுவிறுப்பையும் உணர்ச்சிகரமான தருணங்களையும் சரியாகக் கையாண்டிருப்பதாகவும் ஜோதிகா பதிவிட்டுள்ளார். ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவு காட்சிக் கோணங்களின் அடிப்படையில் கண்களுக்கு விருந்தாக அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

#சினிமா #சூர்யா #ஜோதிகா #மலையாளத் திரைப்படம் #விமர்சனம் #actorSuriya #jyotika #balan

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *