தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழக மழை எச்சரிக்கை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வரும் நாட்களில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக மழை கணிப்பு

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் ஓரிரு பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 25-ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 26-ஆம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னையின் வெப்ப நிலை

சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே சமயம், அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூன் 26-ஆம் தேதி வரை வெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

#weatherUpdate #tamilNaduRain #chennaiWeather #weatherUpdate #weatherToday #weatherAlert #chennaiWeather #weatherTomorrow #tamilnaduWeather #வானிலை நிலவரம்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *