விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

விஜய் பிறந்தநாள்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று தனது 52-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்தச் சிறப்பு வாய்ந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், வெளிநாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களிலும் விஜய் ரசிகர்கள் சார்பில் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் வழங்குதல் மற்றும் ஏழை எளியோருக்கான நலத்திட்ட உதவிகள் போன்ற சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பல இடங்களில் ரத்ததான முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன.

திரையுலக பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் விஜய் அவர்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஜய் அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்-க்கு, எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

#vijay #eps #tvk #birthdaywishes #சென்னை #முதல்-அமைச்சர் விஜய் #பிறந்தநாள் வாழ்த்து #எடப்பாடி பழனிசாமி #tamilNaduChiefMinisterVijay #edappadiKPalaniswami

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *