முதல்வர் விஜய்க்கு வைகோ பிறந்தநாள் வாழ்த்துகள்

முதல்வர் விஜய்

தமிழ்நாடு முதல் அமைச்சர் விஜய்க்கு மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று தொலைபேசி வாயிலாகத் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மறுமலர்ச்சி தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வைகோ இன்று காலை 8.40 மணியளவில் முதல் அமைச்சர் விஜயை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகோ தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தி

இந்த வாழ்த்தின் போது வைகோ கூறுகையில், “முதல் அமைச்சரே, இந்த இனிய பிறந்தநாள் ஆண்டுதோறும் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாடப்பட வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் அரசியல் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வேண்டும். உங்களுக்கு எதிராக எழும் எதிர்ப்புகள் தவிடு பொடியாக வேண்டும்” என்று வாழ்த்தியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் மேன்மை மற்றும் உயர்விற்காக முதல் அமைச்சர் வழிகாட்டும் நல்லாட்சியை முன்னெடுக்க வேண்டும் என்றும், முழுமையான உடல் நலத்தோடும் மன நிறைவோடும் பன்னூறு பிறை கண்டு வாழ இயற்கைத் தாயின் அருளைப் பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

latest

பெரியபாளையத்தில் அமோனியா கசிவு: விசாரணைக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என வைகோ வலியுறுத்தல்

latest

தமிழ்நாடு சட்டசபை: மின்சாரத்துறை வெள்ளை அறிக்கையை இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அறிவிப்பு

latest

சட்டமன்ற கூட்டத்தொடர்: முதல்வர்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ போஜராஜன்

#tamilNadu #politics #cmVijay #vaiko #வைகோ #விஜய் #முதல்-அமைச்சர் விஜய் #மதிமுக #vijay #mdmk

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *