எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு மத்திய கலால் வரி விலக்கு நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

எத்தனால் கலந்த பெட்ரோல்

உள்நாட்டில் உயிரி எரிபொருள் உற்பத்தியை ஊக்குவிக்கவும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தேவையைக் குறைக்கவும் அதிக எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு மத்திய கலால் வரி விலக்கினை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், எரிசக்தித் துறையில் தன்னிறைவு பெறுவதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளித்து வருகிறது இந்திய அரசு.

எத்தனால் கலப்பு இலக்கு மற்றும் வளர்ச்சி

பெட்ரோலில் எத்தனால் கலப்பதைத் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே 20 சதவீதம் என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள ‘இ20’ (E20) திட்டத்தைத் தாண்டி, மேலும் அதிக அளவில் எத்தனால் கலப்பதைத் தூண்டும் நோக்கில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, பெட்ரோலில் 22 சதவீதம், 25 சதவீதம், 27 சதவீதம் மற்றும் 30 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருட்களுக்கு மத்திய கலால் வரி விலக்கினை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை எரிபொருள் உற்பத்தியாளர்களுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாகக் கருதப்படுகிறது.

வரி விலக்கிற்கான நிபந்தனைகள்

இந்த வரிச் சலுகையைப் பெறுவதற்கு சில குறிப்பிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோலுக்கு உரிய வரிகள் முறையாகச் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், கலப்புக்காகப் பயன்படுத்தப்படும் எத்தனாலுக்குரிய ஜிஎஸ்டி (GST) வரி செலுத்தப்பட்டிருந்தால் மட்டுமே இந்த வரி விலக்கினைப் பெற முடியும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

உள்நாட்டு விவசாயிகளுக்குப் பயிர் உற்பத்தியில் கூடுதல் வருவாயை ஈட்டித் தருவதோடு, நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் இந்தத் திட்டம் நீண்டகால அடிப்படையில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

#economy #fuel #governmentPolicy #environment #அதிக எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரி விலக்கு நீட்டிப்பு #மத்திய அரசு #centralGovernment #exciseDuty #petrol #ethanol

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *