டெல்லிக்கு பயணமாகும் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு

முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு விரைந்தார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இதுvும் ஆகும்.

டெல்லி வந்தடைந்த முதலமைச்சர் விஜய்க்கு அங்கு உரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த அவரை அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். மேலும், காவல்துறை அணிவகுப்பு மரியாதை அவருக்கு வழங்கப்பட்டது.

முக்கிய சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகள்

தமிழ்நாடு இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த முதலமைச்சர் விஜய், இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் மாநில வளர்ச்சி மற்றும் மத்திய அரசின் நிதி உதவி தொடர்பான முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் சந்திப்பிற்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு

தனது பயணத்தின் இரண்டாம் நாளில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை முதலமைச்சர் விஜய் சந்தித்துப் பேசுகிறார். தேசிய அரசியல் சூழல் மற்றும் மாநில அளவிலான ஒத்துழைப்புகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

முதலமைச்சர் விஜயின் இந்த முதல் டெல்லி பயணம், மத்திய அரசுடன் தமிழகத்தின் உறவை மேம்படுத்துவதிலும், மாநிலத்தின் நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

#politics #tamilNadu #delhiVisit #cmVijay #vijay #tvk #tnGovt #pmModi #விஜய் #தவெக

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *