தமிழகத்தில் தங்கம் விலை சரிவு: இன்றைய நகை விலை நிலவரம்

தங்கம் விலை

தமிழக சந்தையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் நீடித்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது. மே மாத தொடக்கத்திலிருந்து தங்கம் விலை தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாவதால், நகை வாங்குபவர்கள் சந்தை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

கடந்த மே 13-ஆம் தேதி, ஒரே நாளில் சவரன் ஒன்றுக்கு தங்கம் விலை 5,000 ரூபாய்க்கும் மேல் உயர்ந்தது. இந்த திடீர் விலை உயர்வு நகைக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து மே 16-ஆம் தேதி விலையில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டது. அதன் பிறகு சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் நீடித்த விலை, நேற்று மே 22-ஆம் தேதி மீண்டும் சரிந்தது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

நேற்று ஒரு கிராம் தங்கம் விலை 30 ரூபாய் சரிந்து 14,780 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 240 ரூபாய் குறைந்து 1,18,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த சரிவு இன்று மேலும் தொடர்ந்துள்ளது.

இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 14,730 ரூபாயாக உள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து 1,17,840 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சரிவு நகை விரும்பிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18 காரட் மற்றும் வெள்ளி விலை விவரங்கள்

இதேபோல் 18 காரட் தங்கத்தின் விலையும் சரிவைச் சந்தித்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 12,360 ரூபாயாகவும், ஒரு சவரன் 320 ரூபாய் குறைந்து 98,880 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டாலும், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் 2,95,000 ரூபாய்க்கும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

#goldPrice #economy #tamilNaduNews #jewelry #gold #goldRate #goldPrice #todayGoldPrice #goldRateToday #1GramGoldRate

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *