கடந்த சில வாரங்களாக சந்தையில் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் விலை, இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. மே மாத தொடக்கத்திலிருந்து விலை நிலவரங்கள் தொடர்ந்து மாறி வந்த நிலையில், தற்போதைய விலை சரிவு நகை வாங்குபவர்களுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.
தங்க விலை நிலவரம்
நேற்று நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14,810 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,18,480 ஆகவும் இருந்தது. ஆனால் இன்று விலை சரிந்ததன் காரணமாக, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.30 குறைந்து ரூ.14,780 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து ரூ.1,18,240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் விலை
குறைந்த விலையில் நகைகளை வாங்கும் 18 காரட் தங்கத்தின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிராம் 18 காரட் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.12,400 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.200 குறைந்து ரூ.99,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை உயர்வு
தங்க விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலை மட்டும் சிறு உயர்வைச் சந்தித்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 உயர்ந்து ரூ.295 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மே 13-ஆம் தேதி ஒரே நாளில் சவரன் ஒன்றுக்கு ரூ.5,000 வரை விலை உயர்ந்தது சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து மே 16-ஆம் தேதி ஏற்பட்ட சரிவு மற்றும் மீண்டும் நேற்று ஏற்பட்ட உயர்வு எனத் தங்கம் விலை நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. தற்போதைய இந்த விலை குறைப்பு நகைத் தேவையை பூர்த்தி செய்ய விரும்பும் மக்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

Leave a Reply