இடைத்தேர்தல்: 7 தொகுதிகளில் 4 இல் பாஜக வெற்றி

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுடன், வேறு 5 மாநிலங்களில் காலியாகி இருந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பாரதிய ஜனதா கட்சி 4 இடங்களை வென்று அசத்தியது. காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் 2 இடங்களைப் பிடித்தது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுனேத்ரா பவார் பிரமாண்ட வெற்றி பெற்றார்.

குஜராத் மற்றும் கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்

குஜராத்தின் உம்ரேத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஹர்ஷாத் பார்மர் போட்டியிட்டு 85,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் புருகுராஜ் சின் சவுகான் 54,757 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

கர்நாடகத்தில் பாகல்கோட்டை மற்றும் தாவணகெரே தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. பாகல்கோட்டையில் மறைந்த எம்.எல்.ஏ. எச்.ஒய்.மேட்டியின் மகன் உமேஷ் மேட்டி காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார். அவர் 98,919 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ஜ.க. வேட்பாளர் வீரண்ணா சரண்டிமட் 76,587 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

tாவணகெரே தொகுதியில் மறைந்த எம்.எல்.ஏ. சாமனூர் சிவசரங்கரப்பாவின் பேரன் சமர்த் சாமனூர், காங்கிரஸ் சார்பில் 5,708 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் சீனிவாஸ் தாசகரியப்பாவை வீழ்த்தினார். எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் அப்சர் கொட்லிபேட்டுக்கு 18,975 வாக்குகள் கிடைத்தன.

மகாராஷ்டிரா மற்றும் பிற மாநில முடிவுகள்

மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் மறைந்த அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிட்டு 2,18,930 வாக்குகள் பெற்று பிரமாண்ட வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகள் போட்டியிடாததால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் டெபாசிட் இழந்தனர்.

ரகுரி தொகுதியில் மறைந்த சிவாஜி கர்திலேவின் மகன் அக்சய் கர்திலே 1,40,093 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) வேட்பாளர் கோவிந்த் மோகதேவ் 27,506 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

திரிபுராவின் தர்மநகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஜகர் சக்ரவர்த்தி 18,920 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் அமிதபாதத்தா 6,001 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சயன் பட்டாச்சார்யா 5,936 வாக்குகளும் பெற்றனர்.

நாகாலாந்தின் கொரிடாங் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் டவோசியர் இம்சென் 7,317 வாக்குகள் பெற்று, சுயேச்சை வேட்பாளர் தோசிகமா 4,194 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

பீகார் மேலவை தேர்தல்

பீகார் சட்ட மேலவையில் காலியான ஒரு இடத்துக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மூத்த தலைவர் அரவிந்த் சர்மா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#இடைத்தேர்தல் #பாஜக #காங்கிரஸ் #மகாராஷ்டிரா #கர்நாடகா #தேர்தல் முடிவுகள் #இடைத்தேர்தல் வெற்றி #byElection #bjp #congress

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *