Tag: போலீஸ்காரர்

  • கணவருடன் மற்றொரு பெண்ணுக்கு தொடர்பு: கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடித்த மனைவி

    கணவருடன் மற்றொரு பெண்ணுக்கு தொடர்பு: கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடித்த மனைவி

    சென்னையில் காவல்துறை பணியில் இருக்கும் நபர், தனது மனைவி வெளிநாட்டில் இருக்கும்போது மற்றொரு பெண்ணுடன் வீட்டில் இருந்ததை, கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்த மனைவி அவரை கையும் களவுமாக பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கடலூரைச் சேர்ந்த அபிநயா (29) என்பவர் துபாயில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சென்னை மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் அருள் பிரசாத் (34) என்பவருடன் கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அபிநயா தனது பணி நிமித்தமாக துபாய் சென்றார்.

    இந்நிலையில், அருள் பிரசாத்திற்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருப்பதை அபிநயா சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தபோது அறிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனக்கலக்கமடைந்த அவர், தனது கணவரின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வீட்டிற்குள் ரகசியமாக கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி, அதனைத் தனது கைபேசியுடன் இணைத்துக் கொண்டார்.

    திட்டமிட்டு வந்த மனைவி

    மீண்டும் துபாய் சென்ற அபிநயா, சில நாட்களுக்கு முன்பு கணவருக்குத் தெரியாமல் சென்னை வந்தடைந்தார். ஒரு தனியார் விடுதியில் தங்கி, வீட்டிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் தொடர்ந்து கவனித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு, அருள் பிரசாத் ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததை வீடியோ காட்சிகள் மூலம் உறுதி செய்த அபிநயா, உடனடியாக வீட்டிற்குச் சென்றார்.

    வீட்டிற்குள் நுழைந்த அபிநயா, அங்கு இருந்த இருவரையும் நேருக்கு நேராகக் கண்டார். அப்போது அருள் பிரசாத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவருடன் இருந்த பெண், அபிநயாவைத் தாக்கியதாகத் தெரிகிறது. பதிலுக்கு அபிநயாவும் அந்தப் பெண்ணை தாக்கியதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த மோதலின் போது அபிநயாவின் காது பகுதியில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர்புடைய செய்திகள்

    #crimeNews #chennai #familyDispute #police #போலீஸ்காரர் #சென்னை #உல்லாசம் #police