தமிழகத்தின் முன்னணி நாளிதழான தினமலர், தனது 75வது ஆண்டு பவள விழாவை கொண்டாடி வரும் நிலையில், டிஜிட்டல் ஊடகத்துறையிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சினிமா செய்திகளுக்காக பிரத்யேகமாக வாட்ஸ்அப் சேனல் தற்போது அறிமுக செய்யப்பட்டுள்ளது.
கடந்த 28 ஆண்டுகளாக dinamalar.com என்ற இணையதளத்தின் மூலம் கல்வி, ஆன்மிகம், விளையாட்டு என பல்வேறு துறைகளில் செய்திகளை வழங்கி வரும் தினமலர், சமீபத்தில் தனது சினிமா செய்திப் பிரிவை cinema.dinamalar.com என்ற பெயரில் புதிய வடிவமைப்புடன் மேம்படுத்தியது.
மாற்றமடைந்த வடிவமைப்பு
புதிய வடிவமைப்பிலான இந்த சினிமா இணையதளம், இன்றைய காலத்திற்கு ஏற்ப நவீன பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படத்துறை மட்டுமின்றி, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலக செய்திகளையும் இந்தத் தளம் உள்ளடக்கியுள்ளது.
திரைப்படங்களுக்கான நேர்மையான விமர்சனங்கள், முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளின் புகைப்படங்கள், சிறப்பு நேர்காணல்கள், திரைப்படங்களின் முன்னோட்டங்கள் மற்றும் விளம்பரத் தொகுப்புகள் என அனைத்தும் வாசகர்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சமூக வலைதள விரிவாக்கம்
ஏற்கெனவே முகநூல், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வலுவான இருப்பைக் கொண்டுள்ள தினமலர், சினிமா செய்திகளைத் தனித்தனியாகப் பிரித்து வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே, வாட்ஸ்அப் பயனர்கள் நேரடியாகத் திரையுலகச் செய்திகளைப் பெறும் வகையில் இந்தத் தனிச் சேனல் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாசகர்கள் எந்தவித சிரமமும் இன்றி, உடனுக்குடன் சினிமா தகவல்களைத் தங்கள் கைபேசியிலேயே பெற முடியும். தினமலர் சினிமா வாட்ஸ்அப் சேனலில் இணைய விரும்புவோர், அதற்கான அதிகாரப்பூர்வ இணைப்பைப் பயன்படுத்தி இதில் இணைந்துகொள்ளலாம்.
