Tag: Vijay political victory

  • மு.க.ஸ்டாலின் தோல்வி மனதை பிசைகிறது: மாரி செல்வராஜ்

    மு.க.ஸ்டாலின் தோல்வி மனதை பிசைகிறது: மாரி செல்வராஜ்

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் உணர்வுபூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.

    மாரி செல்வராஜ் உணர்ச்சிப் பதிவு

    இதுகுறித்து மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெரு வலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது” என தெரிவித்துள்ளார். மேலும், “அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள், மக்கள் பிரியம், மக்கள் விருப்பம் என்பதுதான் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வெடித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    த.வெ.க தலைவர் விஜய்க்கு வாழ்த்து

    த.வெ.க தலைவர் விஜய் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், மாரி செல்வராஜ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “தான் கலந்துகொண்ட முதல் தேர்தலிலே அப்படியொரு பிரியத்தையும் எதிர்பார்ப்பையும் த.வெ.க தலைவர் விஜய் சார் அவர்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவ இருக்கும் விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் பணி சிறக்கட்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

    ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

    பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராக நீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும் கொண்டாடும், சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!” என தெரிவித்துள்ளார்.

    தமிழக தேர்தல் முடிவுகள் 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், த.வெ.க தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்க உள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

    #தமிழக தேர்தல் #மு.க.ஸ்டாலின் #மாரி செல்வராஜ் #விஜய் #த.வெ.க #ஏ.ஆர்.ரஹ்மான் #tamilNaduElectionResults #mariSelvarajReaction #mkStalinDefeat #vijayPoliticalVictory