Tag: passport trump

  • அமெரிக்க சுதந்திர தின விழா: அதிபர் டிரம்ப் புகைப்படத்துடன் கூடிய புதிய பயண ஆவணம் அறிமுகம்

    அமெரிக்க சுதந்திர தின விழா: அதிபர் டிரம்ப் புகைப்படத்துடன் கூடிய புதிய பயண ஆவணம் அறிமுகம்

    அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது புகைப்படத்துடன் கூடிய பிரத்யேக பயண ஆவணத்தை (Passport) வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கமான ட்ரூத் சோஷியல் (Truth Social) வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.

    புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பயண ஆவணத்தின் முகப்பில், ‘United States Of America’ என்ற வாசகம் எடுப்பாகத் தெரியும்படி தங்க நிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் அமெரிக்க தேசியக் கொடியுடன் நட்சத்திரங்கள் வரையப்பட்டு, நாட்டின் 250வது சுதந்திர ஆண்டைக் குறிக்கும் வகையில் ‘250’ என்ற எண் அச்சிடப்பட்டுள்ளது.

    தனித்துவமான வடிவமைப்பு

    இந்த பயண ஆவணத்தின் உட்பகுதியானது மிகுந்த நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிபர் டிரம்ப் மேசையில் கைகளை ஊன்றி, உற்றுப் பார்க்கும் வகையிலான அதிகாரப்பூர்வ புகைப்படம் இதில் இடம்பெற்றுள்ளது. அந்தப் புகைப்படத்தின் கீழ் அவரது தங்க வண்ணக் கையெழுத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதிபரின் புகைப்படத்திற்கு நேர் எதிர்பக்கத்தில், அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் சுதந்திரப் பிரகடனத்தின் (Declaration of Independence) நகல் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் வரலாற்றையும் தற்போதைய தலைமையையும் ஒரே ஆவணத்தில் இணைத்துள்ளனர்.

    வழங்கப்படும் முறை

    இந்தச் சிறப்புப் பதிப்பு பயண ஆவணங்கள் வாஷிங்டனில் நேரடியாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 4-ம் தேதி கொண்டாடப்படும் அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு இவை விநியோகிக்கப்பட உள்ளன.

    அமெரிக்காவின் நீண்டகால வரலாற்றில், ஒரு நாட்டின் பயண ஆவணத்தில் அதிபரின் புகைப்படம் நேரடியாக இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த நடவடிக்கை அந்நாட்டு மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    தொடர்புடைய செய்திகள்

    #usa #donaldTrump #internationalNews #passport #டிரம்ப் போட்டோவுடன் வெளியானது புதிய பாஸ்போர்ட்! #usTrump #trumpPaseeport #passportTrump #trumpTruth #donaldTrump