Tag: NSO

  • இந்தியாவில் 10 ஆண்டுகளில் மருத்துவ செலவுகள் 5 மடங்கு உயர்வு

    இந்தியாவில் 10 ஆண்டுகளில் மருத்துவ செலவுகள் 5 மடங்கு உயர்வு

    இந்தியாவில் மருத்துவ செலவு கடந்த 10 ஆண்டுகளில் 5 மடங்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    “Household Social Consumption: Health” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கை 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவ செலவுகள் 5 மடங்கு உயர்வு

    மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒரு நபருக்கு 2014-ல் ரூ.5,636 ஆக இருந்த சராசரிச் செலவு, 2025-ல் ரூ.31,488 ஆக உயர்ந்துள்ளது. இது 10 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரிப்பாகும். இதில் பிரசவ செலவுகள் அடங்காது.

    அதேபோல் நகர்ப்புறங்களில் 2014ல் ரூ.7,670 ஆக இருந்த செலவு, 2025ல் ரூ.38,688 ஆக அதிகரித்துள்ளது.

    மருத்துவமனை செல்வோர் விகிதம் குறைவு

    நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் விகிதம் 2.9% என்ற அளவிலேயே தேக்கமடைந்துள்ளது. இது மக்கள் மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் வீட்டிலேயே சிகிச்சை பெறுவதை காட்டுகிறது.

    மருத்துவ காப்பீடு மற்றும் நிதி நெருக்கடி

    கிராமப்புறங்களில் 47% மக்களும், நகர்ப்புறங்களில் 44% மக்களும் தற்போது மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளனர். இருந்தபோதிலும், பல சிகிச்சைகள் காப்பீட்டில் வராததாலும், தனியார் மருத்துவமனைகளின் ஆதிக்கத்தாலும் மக்கள் தங்கள் சேமிப்பிலிருந்து பெரும் தொகையைச் செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    நோய்களின் மாற்றம்

    மேலும் அந்த அறிக்கையில், முன்பு தொற்றுநோய்களுக்காக மக்கள் மருத்துவமனைக்குச் சென்றனர், ஆனால் இப்போது உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான நீண்ட கால நோய்களே இந்தியர்களின் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    #இந்திய மருத்துவம் #nso #செலவு உயர்வு #சுகாதாரம் #மருத்துவ காப்பீடு #நீண்ட கால நோய்கள் #மருத்துவம் #மருத்துவ செலவு #மருத்துவமனை #உடல்நலக்குறைவு