Tag: Nellai Junction

  • நெல்லை சந்திப்பு தண்டவாள பராமரிப்பு: திருச்செந்தூர் பயணிகள் ரயில்கள் ரத்து

    நெல்லை சந்திப்பு தண்டவாள பராமரிப்பு: திருச்செந்தூர் பயணிகள் ரயில்கள் ரத்து

    தெற்கு இரயில்வே மண்டலத்தின் கீழ் வரும் நெல்லை சந்திப்பு இரயில்வே தண்டவாளங்களில் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பராமரிப்பு பணிகளின் காரணமாக, திருச்செந்தூர் மற்றும் நெல்லை சந்திப்பு இடையே இயங்கும் பயணிகள் ரயில்களின் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    மூன்று நாட்களுக்கு பயணிகள் ரயில்கள் ரத்து

    வெள்ளிக்கிழமை முதல் வரும் 14-ஆம் தேதி வரை திருச்செந்தூர் முதல் நெல்லை சந்திப்பு வரை இயக்கப்படும் பயணிகள் இரயில் (வண்டி எண்: 56004) மற்றும் நெல்லை சந்திப்பு முதல் திருச்செந்தூர் வரை இயக்கப்படும் பயணிகள் இரயில் (வண்டி எண்: 56003) ஆகிய இரண்டும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    பகுதியளவு ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

    இது தவிர, வரும் 14-ஆம் தேதி இயக்கப்படும் திருச்செந்தூர் – நெல்லை பயணிகள் இரயில் (வண்டி எண்: 56752), செய்துங்கநல்லூர் முதல் நெல்லை சந்திப்பு வரையிலான பகுதியில் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் இரயில் (வண்டி எண்: 56753), நெல்லை சந்திப்பு முதல் செய்துங்கநல்லூர் வரையிலான பகுதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டவாளப் பராமரிப்பு பணிகளால் ஏற்படும் இந்த மாற்றங்களால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்கள் மற்றும் பயணிக்க திட்டமிட்டவர்கள் இந்த மாற்றங்களைக் கவனிக்குமாறு இரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    #railwayNews #nellaiJunction #tiruchendur #southernRailway #திருச்செந்தூர் #நெல்லை #பயணிகள் ரெயில் #nellai #passengerTrain