Tag: maari

  • ‘மாரி’ கதாபாத்திரமே மிகவும் கடினம்: தனுஷ் என்னிடம் சொன்னது விக்னேஷ் ராஜா பேட்டி

    ‘மாரி’ கதாபாத்திரமே மிகவும் கடினம்: தனுஷ் என்னிடம் சொன்னது விக்னேஷ் ராஜா பேட்டி

    தனுஷ், மமிதா பைஜூ, ஜெயராம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள படம் ‘கர’. இந்தப் படம் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், படம் தொடர்பான பேட்டிகளை விக்னேஷ் ராஜா வழங்கி வருகிறார். அதில் ஒரு பேட்டியில், தனுஷ் பற்றி சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

    “தனுஷ் சார் பற்றிய என்னுடைய ஆரம்பகால ஞாபகம் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம் பார்த்தது. அப்போது நான் 10வது படித்துக் கொண்டிருந்தேன். அது தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் வெளியானது. எனவே தியேட்டருக்கு செல்ல என் வீட்டில் அனுமதிக்கவில்லை. எனவே திருத்து VCD வாங்கி லேப்டாப்பில் தான் பார்த்தேன். நான் எப்போதும் அப்படி சிரித்ததில்லை. அவ்வளவு அந்தப் படத்தை ரசித்தேன்” என்று விக்னேஷ் ராஜா தெரிவித்தார்.

    தனுஷுடன் பணியாற்றிய அனுபவம்

    தனுஷுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து விக்னேஷ் ராஜா கூறுகையில், “ஒவ்வொரு முறை தனுஷ் சாரிடம் மாற்றம் செய்த ஸ்க்ரிப்டை கொடுக்க செல்லும் போதும் ஏதாவது ஒரு உரையாடல் நிகழும். அப்படி ஒருமுறை சந்திக்கையில், ‘நீங்கள் நிறைய ரோலில் நடித்திருக்கிறீர்கள். உங்களுக்கு மிக சவாலான வேடம் எது?’ என கேட்டேன்” என்றார்.

    ‘மாரி’ தான் தனுஷுக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் என பதில் வந்ததாக விக்னேஷ் ராஜா கூறினார். “குழந்தைகளின் பலூனை சிகரெட்டை வைத்து வெடிக்க செய்யும் அளவுக்கு ஒரு மோசமான ரௌடி. ஆனாலும் அவன் நேசிக்கப்படும் ஒருவனாக இருக்க வேண்டும். அது கத்தி மேல் நடப்பதற்கு சமம். அதற்கு நிறைய மெனக்கெடல் தேவைப்பட்டது’ என தனுஷ் கூறினார்” என்று விக்னேஷ் ராஜா பகிர்ந்துள்ளார்.

    ‘மாரி’ கதாபாத்திரத்தின் சிறப்பு

    2015-ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படம், தனுஷின் நடிப்பில் மிகவும் பிரபலமானது. இந்தப் படத்தில் தனுஷ் ஒரு இரக்கமற்ற ரௌடியாக நடித்திருந்தாலும், பொதுமக்களின் மனதில் ஒரு அன்பான கதாபாத்திரமாக பதிந்தது. தனுஷின் நடிப்பும், படத்தின் இசையும் மிகுந்த வரவேற்பை பெற்றது. ‘மாரி’ படத்தின் தொடர்ச்சியாக ‘மாரி 2’ 2018-ம் ஆண்டு வெளியானது.

    விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கர’ படம், தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்தப் படத்தில் தனுஷின் நடிப்பு மீண்டும் பாராட்டை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    #தனுஷ் #விக்னேஷ் ராஜா #மாரி #கர #தமிழ் சினிமா #பேட்டி #actorDhanush #maari #directorVigneshRaja