Tag: Govt Arts College

  • தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 62 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டது

    தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 62 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டது

    தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1,26,959 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் முதல் தேதி தொடங்கிய நிலையில், தற்போது வரை 62 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மொத்தமுள்ள இடங்களில் 78,827 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் மாணவிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது. மொத்தம் சேர்ந்தவர்களில் மாணவிகள் 47,572 பேர், மாணவர்கள் 31,235 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 20 பேர் என விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி, பி.பி.ஏ மற்றும் கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு மாணவ மாணவியர்களிடையே அதிக விருப்பம் காணப்படுகிறது.

    முதுகலை பட்டப்படிப்பு சேர்க்கை

    இளங்கலை சேர்க்கையுடன் சேர்த்து, முதுகலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவும் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. 110 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    அதிகரிக்கப்பட்ட இட ஒதுக்கீடு

    கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மிகுந்த வேகத்துடன் நடைபெற்று வருகிறது. மாணவர்களின் கல்வித் தேவையை கருத்தில் கொண்டு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும், தனியார் சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும் இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

    தற்போது பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலக்கெடுவிற்குள் மீதமுள்ள இடங்களையும் நிரப்ப உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    தொடர்புடைய செய்திகள்

    #education #tamilNaduGovernment #collegeAdmissions #அரசு கலை அறிவியல் கல்லுரி #அரசு கலை கல்லூரி #govtArtsCollege #govtArtsAndScienceColleges