Tag: ஜிஎஸ்டி சாலை

  • சென்னை திரும்பும் மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

    சென்னை திரும்பும் மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

    தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. இதில் வாக்களிப்பதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. தேர்தல் விடுமுறை மற்றும் வார இறுதி நாள் விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து அவர்கள் சென்னை நோக்கி இன்று முதல் வரத் தொடங்கி உள்ளனர்.

    போக்குவரத்து நெரிசல் பகுதிகள்

    நாளை ஒரே நேரத்தில் வாகனங்களில் வரும் போது கடும் நெரிசல் ஏற்படும் என்பதால், இன்று காலை முதலே ஏராளமானோர் கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் சென்னை நோக்கி வரத் தொடங்கினர். இதனால் இன்று மதியம் முதலே சென்னை நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடி, சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்னை நோக்கி வந்ததால், வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன. மாலை முதல் ஏராளமான வாகனங்கள் வந்ததால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    போலீஸ் நடவடிக்கை

    போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். கிளாம்பாக்கத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல கூடுதல் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை திரும்பும் வாகனங்களால் நாளை காலை வரை போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த கட்ட நடவடிக்கைகள்

    போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மாற்று பாதைகள் மூலமாக வாகனங்களை திருப்பிவிடும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், சிக்னல்கள் சரிசெய்யப்பட்டு ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசலை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மாற்று பாதைகள் மூலம் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    #சென்னை #போக்குவரத்து நெரிசல் #தேர்தல் #ஜிஎஸ்டி சாலை #பொதுமக்கள் #போலீஸ் #gstRoad #வாகனங்கள்