மேற்கு வங்காள அரசியலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ச்சியான பின்னடைவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், அடிப்படை உறுப்பினருமான சுஷ்மிதா தேவ் தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த சுஷ்மிதா தேவ், அதன் பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். தற்போது அவர் தனது பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது கட்சியின் தலைமைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சுஷ்மிதா தேவ் சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டார். மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்கு உரிய முக்கியப் பொறுப்பாளராக இருந்த சுகேந்து சேகர் ராய் சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய நிலையில், தற்போது சுஷ்மிதா தேவ் விலகியிருப்பது கவனிக்கத்தக்கது.
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் பல்வேறு உட்கி பூச்சல்கள் வெடித்தன. ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் 61 சட்டசபை உறுப்பினர்கள் இயங்கி வரும் சூழலில், அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அரசியல் மாற்றங்கள் மம்தா பானர்ஜியின் தலைமையிலான கட்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.
