Tag: ஜி.வி. பிரகாஷ் குமார்

  • தனுஷின் ‘கர’ படத்திற்கு தடைக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

    தனுஷின் ‘கர’ படத்திற்கு தடைக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

    இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகவுள்ள படம் ‘கர’. இப்படத்தில் தனுஷுடன் ஜெயராம், ரவிக்குமார், கருணாஸ், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார். தணிக்கைக் குழு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கிய நிலையில், வரும் 30ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

    பெயர் சர்ச்சை

    இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டிற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம் பூவாய் அம்மன் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் மனு தாக்கல் செய்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன் தாம் ‘கர’ என்ற பெயரைப் பதிவு செய்ததாகவும், அந்த பெயரை மாற்றாமல் படத்தை வெளியிடக்கூடாது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு காரணமாக, படம் குறித்த தேதியில் வெளியாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது. படக்குழு இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    #தனுஷ் #கர படம் #சென்னை உயர் நீதிமன்றம் #தடை மனு #விக்னேஷ் ராஜா #ஜி.வி. பிரகாஷ் குமார் #actroDhanush #kara #chennaiHighCourt #கர