Tag: கேஎல் ராகுல்

  • 265 ரன் இலக்கை சேஸ் செய்து பஞ்சாப் வரலாற்று சாதனை

    265 ரன் இலக்கை சேஸ் செய்து பஞ்சாப் வரலாற்று சாதனை

    புதுடில்லி: டெல்லிக்கு எதிரான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 265 ரன் என்ற இமாலய இலக்கை அடைந்து பஞ்சாப் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    போட்டி விவரங்கள்

    டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கேஎல் ராகுல் மற்றும் நிசன்கா துவக்க வீரர்களாக இறங்கினர். போட்டியின் 3வது ஓவரிலேயே நிசன்கா 11 ரன்னுக்கு அவுட்டானார்.

    அதன்பிறகு, ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் நிதிஷ் ரானா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்தனர். கேஎல் ராகுல் 67 பந்துகளில் 152 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரானா 91 ரன்னுக்கு அவுட்டானார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு டெல்லி அணி 264 ரன் குவித்தது.

    265 ரன் சேஸ்

    265 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு இளம் வீரர்கள் பிரியன்ஷ் ஆர்யா (43), பிரப்சிம்ரன் சிங் (76) ஆகியோர் அதிரடியான துவக்கத்தை கொடுத்தனர். அதன்பிறகு கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் சிக்சர் மழை பொழிந்தார். இறுதியில், 18.5 ஓவர்களில் 265 ரன் இலக்கை பஞ்சாப் அணி எட்டியது.

    இதன்மூலம், பிரீமியர் லீக் வரலாற்றில் அதிகபட்ச ரன் சேஸ் என்ற சாதனையை பஞ்சாப் படைத்தது. இதற்கு முன்னதாக, 2024ல் கோல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன் இலக்கை பஞ்சாப் அணியே சேஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    சாதனைகள்

    இன்றைய போட்டியில் 152 ரன் குவித்த கேஎல் ராகுல், ஐபிஎல் தொடரில் தனிநபர் 3வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். முதல் இடத்தில் கிறிஸ் கெயில் (175*), 2வது இடத்தில் பிரெண்டன் மெக்குல்லம் (158*) உள்ளனர். டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய வீரர்களில் கேஎல் ராகுல் முதலிடம் பிடித்துள்ளார்.

    மேலும், கேஎல் ராகுல்-ரானா ஜோடி 220 ரன் பார்ட்னர்ஷிப் பதிவு செய்து, ஐபிஎல் 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் சாதனை படைத்தது. முதல் இடத்தில் கோலி-டிவில்லியர்ஸ் (229) உள்ளனர். அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் கேஎல் ராகுல் (6) 3வது இடத்தில் உள்ளார்.

    நிகிடி காயம்

    பஞ்சாப் இன்னிங்ஸின் போது பீல்டிங் செய்துகொண்டிருந்த டெல்லி வீரர் லுங்கி நிகிடி, பிரியன்ஸ் ஆர்யா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்று கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து மேலும் தகவல்கள் வெளியாகவில்லை.

    #ஐபிஎல் #பஞ்சாப் கிங்ஸ் #டெல்லி கேப்பிடல்ஸ் #கேஎல் ராகுல் #கிரிக்கெட் #265 ரன் சேஸ் #முத்திரை பதித்தது பஞ்சாப் #265 ரன் இலக்கை சேஸ் செய்து அபாரம்