தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் திரட்டும் பணியில் ஓய்வின்றி ஈடுபட்டார்.
தேர்தல் பணி முடிந்து ஓய்வு
நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுக்க முடிவு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை 11 மணியளவில் தனி விமானம் மூலம் குடும்பத்துடன் மதுரை புறப்பட்டார். மதுரை விமான நிலையத்தை சென்றடைந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்கிறார்.
ஓய்வு திட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் ஒரு வார காலம் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வு எடுக்க உள்ளார். தேர்தல் பணியின் களைப்பு நீங்க அவர் இந்த ஓய்வை திட்டமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கும் அவர், தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன் சென்னை திரும்ப வாய்ப்புள்ளது.
