இந்தியாவில் 40 சதவீத வழக்கறிஞர்கள் போலி பட்டம் பெற்றவர்கள்: பார் கவுன்சில் தலைவர் தகவல்

போலி வழக்கறிஞர்கள்

நீதிமன்ற நடைமுறைகளில் பெரும் பாதிப்பு

இந்திய நீதிமன்றங்களில் கறுப்பு அங்கியை அணிந்து வாதிடும் வழக்கறிஞர்களில் கணிசமானவர்கள் போலி பட்டம் பெற்றவர்களே என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா வெளியிட்டுள்ள தகவல்கள் சட்ட வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் வழக்கறிஞர்களில் சுமார் 35 முதல் 40 சதவீதம் பேர் முறையான கல்வித் தகுதிகள் இன்றி, போலியான சான்றிதழ்களைக் கொண்டு பணியில் நுழைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய நபர்கள் சட்ட நுணுக்கங்கள் தெரியாமல் வாதிடுவது நீதித்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

விண்ணப்பப் படிவங்களில் வெளிப்பட்ட உண்மை

பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்களின் பட்டங்கள் மற்றும் தகுப்புகளை ஆய்வு செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, அனைத்து வழக்கறிஞர்களும் தங்களின் விவரங்களை அளித்து விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இருப்பினும், சுமார் 40 சதவீத வழக்கறிஞர்கள் இதுவரை இந்த விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்யவில்லை. முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலேயே இவர்கள் விண்ணப்பிக்கத் தயங்குகிறார்கள் என்றும், இதன் மூலம் இவர்களே போலி பட்டம் பெற்றவர்களாக இருக்கலாம் என்றும் மனன் குமார் மிஸ்ரா சந்தேகத்தைத் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதியின் கடும் கண்டனம்

இந்த விவகாரம் குறித்து இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. போலி பட்டம் பெற்று, சட்டத் தொழிலில் நுழைந்து நீதிமன்றங்களை ஏமாற்றும் நபர்கள் குறித்து தலைமை நீதிபதி தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

சட்டத்தின் புனிதத்தையும், நீதிமன்றத்தின் கௌரவத்தையும் சீர்குலைக்கும் இத்தகைய நபர்களைத் தகுந்த முறையில் அடையாளம் கண்டு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தகுதியற்றவர்கள் சட்டப் பணியில் ஈடுபடுவது பொதுமக்களின் நீதிப் பெறுவதிலும் தாமதத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பார் கவுன்சில் அனைத்து மாநில வழக்கறிஞர்களின் விவரங்களை சரிபார்க்கும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. போலி ஆவணங்கள் சமர்ப்பித்தது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

#சட்டம் #நீதிமன்றம் #இந்தியா #பார் கவுன்சில் #35-40 சதவீத வழக்கறிஞர்கள் போலி: பார் கவுன்சில் தலைவர் அதிர்ச்சி தகவல் #வழக்கறிஞர்கள் #போலி #barCouncil #lawer #advocated

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *