ராம் சங்கையா இயக்கத்தில் கவின் புதிய திரைப்படம்: கதாநாயகியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி

நடிகர் கவின்

சின்னத்திரையில் தொடங்கி தற்போது திரைப்படங்களில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் நடிகர் கவின். தொடர்ச்சியாகப் பல கதைகளில் நடித்த வரும் அவர், தற்போது ராம் சங்கையா இயக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இத்திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார். ஏற்கனவே ‘லப்பர் பந்து’, ‘தக் லைஃப்’ மற்றும் ‘பரிமளா அன் கோ’ போன்ற திரைப்படங்களில் நடித்த சஞ்சனா, இந்த படத்தின் மூலம் கவினுடன் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதைக் களம் மற்றும் தயாரிப்பு

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படம், கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமான கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. படத்தின் இசை மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவினின் திரைப்பயணம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம் அறிமுகமான கவின், பின்னர் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்துப் பெரும் புகழ்பெற்றார். அதன் பின்னர் ‘நட்புனா என்ன தெரியுமா’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனது அடையாளத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்.

தொடர்ந்து ‘லிஃப்ட்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு ‘ஸ்டார்’, ‘கிஷ்’, ‘டாடா’ மற்றும் ‘ப்ளடி பக்கர்’ எனத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் ஆகியோருடன் இணைந்து நடித்து வரும் ‘ஹாய்’ திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. இத்தகைய சூழலில், ராம் சங்கையா இயக்கத்தில் இப் படம் கவினின் வாழ்க்கையில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

#kavin #sanjanaKrishnamurthy #tamilcinema #newmovieupdate #ramSangaiah #sanjanaKrishnamoorthy #கவின் #ஹாய் #ராம் சங்கையா #சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *