வாழ 2 படக்குழுவை பாராட்டிய ராம்சரண்

மலையாள சினிமாவில் சவின் எஸ்ஏ இயக்கத்தில் உருவான ‘வாழ 2’ திரைப்படம், புது முகங்களான ஹாஷிர், ஆலன் பின் சிராஜ், அஜின் ஜாய், விநாயக் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2ஆம் தேதி வெளியானது. இது கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘வாழ’ படத்தின் இரண்டாம் பாகமாகும்.

நடிகர் ராம்சரணின் பாராட்டு

நண்பர்களுக்குள் நடக்கும் விஷயங்களை காமெடி மற்றும் உணர்ச்சிகளுடன் சொன்ன இப்படம், மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், மூன்றாம் பாகத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் ராம்சரண் ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான பதிவு ஒன்றையும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ராம்சரணின் எக்ஸ் பதிவு

தனது எக்ஸ் பதிவில், “வாழ 2 படக்குழுவினருடன் இணைந்து உரையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாகத் திகழ்ந்த இப்படம், தற்போது தெலுங்கு ரசிகர்களைச் சென்றடையத் தயாராகி வருகிறது. இப்படத்தை இன்னும் பரந்த அளவிலான ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சஹுகாரபதி மற்றும் அர்ச்சனா ஆகியோரைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இப்படத்தின் உந்துசக்தியாகத் திகழும் விபின் தாஸ், இயக்குனர் சவின் எஸ்.ஏ மற்றும் அந்த இளம் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்.

மூன்றாம் பாக திட்டம்

‘வாழ 2’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாம் பாகம் குறித்த பணிகள் விரைவில் தொடங்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் இளம் நட்சத்திரங்களை முன்னிறுத்தி எடுக்கப்படும் இப்படம், அடுத்தடுத்த பாகங்களுடன் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#ராம்சரண் #வாழ 2 #மலையாளம் #திரைப்படம் #விஜய் புரொடக்ஷன்ஸ் #vaazha2Film #ramCharan #vaazha2 #malayalamFilm #sequel

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *