முதலமைச்சர் விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று தனது 52-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்தச் சிறப்பான நாளில் மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து அவருக்கு வாழ்த்து மழையாய் பொழிந்து வருகிறது.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்கள் நீண்ட ஆயுளுடனும், சிறந்த உடல்நலத்துடனும் பொதுப்பணி செய்ய வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, இன்று காலை 8.40 மணி அளவில் முதலமைச்சர் விஜயை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். உரையாடலின் போது, “இந்த இனிய பிறந்தநாள் ஆண்டுதோறும் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாடப்பட வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் அரசியல் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும், எதிர்ப்புகள் அனைத்தும் தகர்ந்து போகவும் வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டின் மேன்மை மற்றும் உயர்விற்காக வழிகாட்டும் நல்லாட்சியை நீங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். முழுமையான உடல் நலத்தோடும், மனநிறைவோடும் பன்னூறு பிறை கண்டு வாழ இயற்கைத் தாயின் அருளைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்தார்.

பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்குத் தொடர்ந்து பணியாற்ற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

#chiefMinisterVijay #birthdayWishes #tamilNaduPolitics #tvk #vijay #edappadiPalaniswami #vaiko #anbumaniRamadoss #விஜய் #தவெக

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *