முதலமைச்சர் விஜய்யின் விமர்சனத்திற்கு அதிமுக எம்.பி. இன்பதுரை பதில் பதிவு

முதலமைச்சர் விஜய்

தமிழக முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் தமிழக வெற்றி கழக ஆட்சியை அமைப்பதைத் தடுப்பதற்காக அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் ரகசியமாக கைகோர்த்து கூட்டு முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டினார். மேலும், அதிமுகவின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து தனது உரையைத் தொடர்ந்தார்.

முதலமைச்சரின் இந்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை இதற்குத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

இன்பதுரையின் பதில் பதிவு

தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இன்பதுரை, முதலமைச்சர் விஜய்யின் கருத்துக்களைக் கடுமையாக மறுத்துள்ளார். அதில், “இரவல் சக்தியால் கோட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கும் வாடகை சக்தியை வீழ்த்தப் போகும் உண்மையான மக்கள் சக்தி அதிமுக” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, திருச்சி நிகழ்ச்சியில் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டங்கள் மற்றும் அதற்கு அதிமுக தரப்பிலிருந்து வந்த உடனடி பதில் ஆகியவை அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

#tamilNaduPolitics #tvk #admk #cmVijay #இன்பதுரை எம்பி #தவெக விஜய் #அதிமுக

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *