விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்: அமைச்சர் வினோத் தகவல்

பயிர்க்கடன் தள்ளுபடி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைபட்டு பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-2026-ஆம் ஆண்டிற்கான சிறப்பு பருவம் மற்றும் 2026-2027-ஆம் ஆண்டிற்கான முதன்மை அரவை தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் வினோத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கரும்பு அரவை பணியினை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

சர்க்கரை ஆலை செயல்பாடுகளை ஆய்வு

தொடக்க விழாவிற்குப் பிறகு, அமைச்சர் வினோத் சர்க்கரை ஆலையில் அமைக்கப்பட்டுள்ள கரும்பு அரவை குறித்த கண்காட்சியினை விரிவாகப் பார்வையிட்டார். அங்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் செயல்பாடுகள், கரும்பு அரவை முறையின் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா தலைமை தாங்கிய நிலையில், அந்த தொகு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் முன்னிலை வகித்தார்.

பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு

நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வினோத், விவசாயிகளுக்குக் காத்திருக்கும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வது குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று அவர் தெரிவித்தார்.

தனி வேளாண் பட்ஜெட் மற்றும் ஆதார விலை

மேலும், மாநில அரசின் வரவு செலவுத் திட்டத்தில் கரும்புக்கான ஆதார விலை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று குறிப்பிட்ட அவர், வேளாண்மைத் துறைக்கெனத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற முக்கிய தகவலையும் பகிர்ந்துகொண்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் முறையாகக் கேட்டறியப்பட்டு வருவதாகவும், அந்தந்தப் பகுதி விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்பப் பயன் தரும் திட்டங்கள் பட்ஜெட்டில் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் வினோத் உறுதிபடத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

#tamilNaduAgriculture #loanWaiver #sugarMill #kallakurichi #vijay #ministerVinodh #cropLoanWaiver #விஜய் #அமைச்சர் வினோத் #பயிர்க்கடன் தள்ளுபடி

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *