சென்னையில் தங்கம் விலை சரிவு: சவரனுக்கு ரூ.2,160 குறைந்து விற்பனை

தங்கம் விலை

சென்னையில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் விலை சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் நகை வாங்குபவர்களிடையே மகிழ்ச்சி நிலவுகிறது.

கடந்த ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தங்கம் விலை சரிந்ததைத் தொடர்ந்து, நேற்று மேலும் விலை குறைந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 சரிந்து, ஒரு கிராம் ரூ.13,300 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,06,400 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய விலை நிலவரம்

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ.270 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,030 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,04,240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,900 ஆகவும், ஒரு சவரன் ரூ.87,200 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை மாற்றம்

தங்கத்துடன் இணைந்து வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.240 ஆகவும், ஒரு கிலோகிராம் ரூ.2,40,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் விலை மாற்றங்கள் மற்றும் தேவை குறைப்பு காரணமாக இந்தியச் சந்தையிலும் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

#goldPrice #chennaiNews #economy #jewellery #gold #goldRate #goldRateToday #todayGoldRate #goldPrice #goldPriceToday

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *