ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லை பாதுகாப்புப்படையினர், பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இளைஞரை நேற்று இரவு கைது செய்தனர்.
பூஞ்ச் மாவட்டத்தின் குல்பூர் பகுதியில் எல்லை பாதுகாப்புப்படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு இளைஞர் இந்திய எல்லைக்குள் நுழைவதைக் கண்டறிந்தனர். உடனடியாகச் செயல்பட்ட பாதுகாப்புப் படையினர் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தினர்.
விசாரணையில் தெரியவந்த தகவல்கள்
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் போலஸ் கிராமத்தைச் சேர்ந்த முகமது சஜத் (26) என்று தெரியவந்தது. தான் தவறுதலாகவே இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது முகமது சஜத் பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவர் எந்த நோக்கத்திற்காக எல்லைக்குள் நுழைந்தார் என்பது குறித்தும், அவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் பாதுகாப்புப் படையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தகைய ஊடுருவல்களைத் தடுக்க இந்தியப் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

Leave a Reply