தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் நீடித்து வருகின்றன. ஜூன் மாத தொடக்கத்தில் தங்கம் விலை கணிசமாகக் குறைந்திருந்த நிலையில், தற்போது சந்தையில் விலை நிலவரம் ஓரளவுக்கு சீராகியுள்ளது.
தங்கம் விலை நிலவரம்
ஜூன் 20-ஆம் தேதி தங்கம் விலையில் சிறு உயர்வு ஏற்பட்டது. அப்போது 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 30 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 13,600 ரூபாயாகவும், ஒரு சவரன் 240 ரூபாய் உயர்ந்து 1,08,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று (ஜூன் 22) தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,08,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் ஒரு கிராம் 11,370 ரூபாய்க்கும், ஒரு சவரன் 90,960 ரூபாய்க்கும் விற்பனை ஆகிய வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் இன்று எந்த மாற்றமும் காணப்படவில்லை. சந்தை நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ கிராம் வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்கள் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை நகைகளின் விலையை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனால் நகை வாங்குவோர் அன்றாட விலை நிலவரத்தைக் கவனித்து முடிவெடுத்து வருகின்றனர்.

Leave a Reply