சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் நீடித்து வந்த தங்கத்தின் விலை, இன்று மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த 11-ஆம் தேதி விலை கணிசமாகக் குறைந்து ஒரு சவரன் 1,08,000 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.
விலை சரிவு நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், கடந்த சில நாட்களில் தங்கம் மீண்டும் ஏறுமுகமாக பயணிக்கத் தொடங்கியது. அதன் விளைவாக, நேற்று முன்தினம் சவரணுக்கு 1,680 ரூபாய் வரை விலை உயர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இருப்பினும், நேற்று முதல் மீண்டும் விலை குறைவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
இன்றைய விலை விவரம்
நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாயும், சவரணுக்கு 80 ரூபாயும் சரிந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரணுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. இதன் அடிப்படையில், தற்போது ஒரு சவரன் தங்கம் 1,12,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கிராமுக்கு 30 ரூபாய் விலை குறைந்துள்ளதால், ஒரு கிராம் தங்கம் தற்போது 14,030 ரூபாய்க்கு கிடைக்கிறது. விலை மாற்றங்களால் நகைக்கடைகளில் வாங்குவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், வெள்ளியின் விலை இன்று நிலையாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ கிராம் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் தேவையைப் பொறுத்து வரும் நாட்களில் விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

Leave a Reply