சென்னை: இன்றைய தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.14,230 ஆகவும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்
ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200 ஆகவும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600 ஆகவும் இருந்தது. இன்று மேலும் உயர்வு கண்டுள்ளது.
தங்கம் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் இறக்குமதி வரி மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
18 காரட் மற்றும் வெள்ளி விலை
18 காரட் தங்கம் விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.11,870 ஆகவும், சவரன் விலை ரூ.160 உயர்ந்து ரூ.94,960 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.270 ஆகவும், ஒரு கிலோ ரூ.2,70,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ஒரு லட்ச ரூபாயை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply